மாவட்ட செய்திகள்

தேசிய அறிவியல் கருத்தரங்கம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வருகை + "||" + National Science Seminar, Visit by Governor Panwarilal Purohit

தேசிய அறிவியல் கருத்தரங்கம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வருகை

தேசிய அறிவியல் கருத்தரங்கம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வருகை
தேசிய அறிவியல் கருத்தரங்கம் ஊட்டியில் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வந்தார்.
ஊட்டி,

இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்குகிறது. கருத்தரங்கை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் நேற்று மாலை 5.45 மணிக்கு ஊட்டி ராஜ்பவனுக்கு வருகை புரிந்தார். அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் கோத்தர், தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர். இன்று(வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

அதன் பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கவர்னர் தூய்மை பணியை மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில் கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊட்டி நகராட்சி கமிஷனர் நாராயணன் உடனிருந்தார். ஊட்டிக்கு தமிழக கவர்னர் வந்ததை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை வந்தார் - கவர்னர், அமைச்சர் வரவேற்றனர்
கோவை மற்றும் சூலூரில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வரவேற்றனர்.
2. நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
3. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மண் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
4. ‘உயர்கல்வியில் தமிழகத்துக்கு மதிப்புமிக்க இடம்’ சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்
உயர்கல்வியில் தமிழகம் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது என்று சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
5. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்: மாணவ-மாணவிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.