மும்பையில் இயக்குவதற்காக 2-வது ஏ.சி. மின்சார ரெயில் மார்ச் மாதம் வருகிறது
மும்பையில் இயக்குவதற்காக 2-வது ஏ.சி. மின்சார ரெயில் மார்ச் மாதம் மும்பை வருகிறது.
மும்பை,
நாட்டிலேயே மும்பையில் தான் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் முதல் போரிவிலி, விரார் வரை ஒரு மின்சார ரெயிலை கொண்டு தினசரி 12 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அதிக கட்டணம் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
மார்ச் மாதம் வருகிறது
மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் இயக்குவதற்கு மொத்தம் 18 ஏ.சி. மின்சார ரெயில்கள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலையில் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில், மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் 2-வது மின்சார ரெயிலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி ரவீந்திர பாக்கர் மேற்கு ரெயில்வேக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலில், தற்போது இயக்கப்பட்டு வரும் அதே வடிவமைப்பில் 2-வது ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் மார்ச் மாத இறுதியில் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story