‘பப்ஜி' ஆன்-லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் முதல்-மந்திரிக்கு 11 வயது சிறுவன் கடிதம்
‘பப்ஜி' ஆன்-லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என முதல்-மந்திரிக்கு 11 வயது சிறுவன் கடிதம் எழுதி உள்ளான்.
மும்பை,
தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய நவீன உலகில் ஸ்மாா்ட் போன்கள் அனைவரின் கைகளிலும் தவழ்கிறது. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப செயலிகள் வரவும் அதிகரித்து விட்டது. அதேபோல் ஸ்மார்ட் போன்களின் வரவால் புதுப்புது விளையாட்டுகளும் வரத் தொடங்கியுள்ளன. அவ்வாறு இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் ஆன்-லைனில் விளையாடப்படுவது ‘பப்ஜி' விளையாட்டு தான்.
இந்த விளையாட்டை இணையதளம் மூலம் குழுவாகவும் பேசி கொண்டே விளையாடலாம். இந்த விளையாட்டை மராட்டியத்தில் தடை செய்ய வேண்டும் என அகத் (வயது 11) என்ற சிறுவன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதி உள்ளான்.
வன்–மு–றையை ஊக்–கு–விக்–கும்...
அந்த கடிதத்தில் பப்ஜி விளையாட்டு வன்முறை, கொலை, சூறையாடல், ஆக்கிரமிப்பு போன்ற ஒழுக்க கேடான செயல்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டு உள்ள சிறுவன், எனவே இந்த ஆன்லைன் விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறான்.
இந்த கடிதத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டோருக்கும் அனுப்பி இருக்கிறான்.
மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடர்வேன் என்றும் அவன் தெரிவித்து உள்ளான்.
Related Tags :
Next Story