தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 81 ஊர்க்காவல்படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி கடந்த 1-12-2018 முதல் 30-1-2019 வரை நடந்தது. ஊர்க்காவல்படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கவுசல்யா, சப்-இன்ஸ்பெக்டர் வேலப்பன் ஆகியோர் மேற்பார்வையில், போலீஸ் ஏட்டுக்கள் அய்யப்பன், சுரேஷ், வைகுண்டராமன் ஆகியோர் கவாத்து பயிற்சி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கவாத்து மைதானத்தில் நேற்று நடந்தது. அணிவகுப்புக்கு ஊர்க்காவல் படை வீரர் தெய்வப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘ஊர்க்காவல் படையினர் போலீஸ் துறையின் அங்கம். அவர்கள் எப்போதும் பணிபுரிவதற்கு தயாராக இருக்கவேண்டும். பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்க வேண்டும்’ என்றார். பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், கோவில் பாதுகாப்பு மற்றும் இதர பணிகளுக்கு போலீசாருடன் இணைந்து செயல்பட உள்ளனர்.
விழாவில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஜான் ஆல்பர்ட், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story