தேனியில் தொழிலாளி தற்கொலை


தேனியில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-02-01T01:18:16+05:30)

ஆண்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயமாலா. கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணன் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் கண்ணன், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகே புறவழிச்சாலையோரம் மலைக்கரட்டுப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள், தூக்கில் பிணம் தொங்குவதை பார்த்து தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story