மாவட்ட செய்திகள்

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போதுகிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலி + "||" + During deepening work The fallen stone from the crane kills the worker

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போதுகிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலி

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போதுகிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலி
கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலியானார்.
நல்லம்பள்ளி, 

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள உச்சிமரத்துகொட்டாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதில் கூலித்தொழிலாளி தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவர் வேலைபார்த்தார்.

நேற்று காலை கிணற்றை ஆழப்படுத்துவதற்காக கிரேன் மூலம் கற்களை எடுத்து வெளியேற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது கிரேனில் இருந்து கல் விஜயகுமார் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான விஜயகுமாருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...