மாவட்ட செய்திகள்

இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள் + "||" + Final list release: 12 lakh 56 thousand 262 voters in Pudukottai district

இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள்

இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் கணேஷ் வெளியிட்டார்.


அதன்படி கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,083 ஆகும்.

இது தொடர்பாக கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, 1.1.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2019-யினை செயல்படுத்தமாறு இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உரிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1.9.2018 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.9.2018 முதல் 31.10.2018 வரையிலான நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மற்றும் அனைத்து தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தகுதியுடைய நபர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த கோரிக்கைகளுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று (நேற்று) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிய வாக்காளர்களாக மொத்தம் 28 ஆயிரத்து 503 நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 18 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் 12 ஆயிரத்து 796 நபர்கள் ஆவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் டெய்சிகுமார், பஞ்சவர்ணம், ஜெயபாரதி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாஸ்கர், தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், காங்கிரஸ் சார்பில் இப்ராகிம்பாபு, தே.மு.தி.க. சார்பில் ரவி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராமச்சந்திரன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.