தனியார் பஸ் நிறுவன ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை


தனியார் பஸ் நிறுவன ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தனியார் பஸ் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

தஞ்சை அருகே மானா மதுரையை சேர்ந்தவர் நந்த குமார்(வயது 50). இவருக்கு சொந்தமாக திருச்சி தென்னூர் தாசில்தார்சந்து பகுதியில் வீடுடன் கூடிய இடம் இருந்தது. நந்தகுமார் தனியார் பஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் திருச்சி தென்னூருக்கு வந்து அங்குள்ள வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னை 4 பேர் தாக்கிவிட்டதாக கூறி, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் வெளிக்காயங்கள் இருப்பதற்கான அறிகுறி இல்லாததால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து நந்தகுமாரின் சகோதரரான வயலூர்ரோட்டை சேர்ந்த பழனிசாமியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர், தான் ஒரு மாதத்துக்கு முன்பே நந்தகுமாருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாகவும், அதன்பிறகு அவரை சந்திக்கவே இல்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து தென்னூரில் உள்ள இடம் தொடர்பான பிரச்சினையில் சம்பவத்தன்று இரவு அவருக்கு யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனரா? அல்லது யாரேனும் அவரை தாக்கியதில் உயிரிழந்தாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் தில்லைநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
1 More update

Next Story