காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு: மேலாண்மை இயக்குனர் தற்காலிக பணி நீக்கம்


காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு: மேலாண்மை இயக்குனர் தற்காலிக பணி நீக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:15 AM IST (Updated: 1 Feb 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடுகள் புகார் எதிரொலியாக அந்த பட்டு கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக நெசவாளர்கள், சில நாட்களுக்கு சங்கத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும், ஆண்டுதோறும், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகையின் போது, லாபத்தை கணக்கிட்டு நெசவாளர்களுக்கு அதிகப்படியான போனஸ் வழங்குவது வழக்கம். இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு, 24 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என அறிவித்ததால், அதிர்ச்சி அடைந்த நெசவாளர்கள் நிர்வாககுழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைத்தறி துறை இணை இயக்குனரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் முறைகேடு சம்பந்தமாக விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையொட்டி, காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் பிரகாசை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 


Next Story