சம்பளம் குறைக்கப்பட்டதால் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் மீண்டும் போராட்டம்
புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து பதவி உயர்வினை மறுஆய்வு செய்யுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக கழக நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கு அனைத்து சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மேலாண் இயக்குனர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மேலாண் இயக்குனர் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்றும் பதவி உயர்வு ரத்து தொடர்பாக தெரிவிக்கப்படும் ஆட்சேபனையை எழுத்துபூர்வமாக தெரிவிக்குமாறும் கூறினார். அவரது உறுதிமொழியை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
இந்தநிலையில் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு நேற்று சம்பளம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பதவி இறக்கம் செய்யப்பட்ட பதவிக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை சம்பளம் குறைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நேற்று மீண்டும் பணிகளை புறக்கணித்தனர். கடற்கரை சாலையில் உள்ள மேலாண் இயக்குனர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. வந்தார். அவர் ஊழியர்களை அழைத்து பேசினார். தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் ஊரில் இல்லை என்பதால் வருகிற 4-ந்தேதி அவருடன் சுற்றுலாத்துறை செயலாளர், இயக்குனர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ஆகியோரை வைத்து பேசி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story