இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது ஆண்களை விட பெண்கள் அதிகம் புதுச்சேரியில் 9½ லட்சம் வாக்காளர்கள்
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 9½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள்.
புதுச்சேரி,
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1.1.2019 தேதியை வாக்காளராக தகுதி பெறும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர் 1-ந்தேதியன்று தொடங்கின. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தங்கள், இடம் மாறுதல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதிவரை பெறப்பட்டன.
இந்த காலகட்டத்தில் வாக்காளராக பெயர் சேர்ப்பதற்காக 31 ஆயிரத்து 992 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 28 ஆயிரத்து 565 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.
இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவை காரணமாக 8 ஆயிரத்து 82 பெயர்கள் நீக்கப்பட்டன. பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 28 ஆயிரத்து 487 விண்ணப்பங்கள் வந்தன. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் தற்போது 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 153 பேர் ஆண்கள், 5 லட்சத்து 6 ஆயிரத்து 320 பேர் பெண்கள், 93 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.
வாக்காளர் பட்டியலை web:http://ceopuducherry.py.gov.in என்ற வலைத்தளத்திலும் காணலாம். அதில் ஒவ்வொருவரும் தங்களின் பெயர் இருக்கிறதா?, சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலை தொடர்ச்சியாக திருத்தும் நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.
கடந்த ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் எவராவது தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றால், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் . www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, புதுவை, காரைக்கால் மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்த தகவல்களை அறியலாம்.
புதுவை மாநிலத்தில் 2016 சட்டமன்ற தேர்தலின்போது 930 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது அந்த வாக்குச்சாவடிகள் 970 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வில்லியனூர் தொகுதியில் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக உருளையன்பேட்டையில் 23 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரே இடத்தில் 3 வருடம் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை அந்ததுறையும் தொடங்கியுள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. பழுதான எந்திரங்கள் பழுதுநீக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறினார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது?
பதில்: தட்டாஞ்சாவடி தொகுதி காலியானது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுக்கும்.
கேள்வி: தேர்தல் தொடர்பான வழக்குகள் ஏதேனும் வாபஸ் பெறப்பட்டுள்ளதா?
பதில்: கடந்த சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களின்போது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் தற்போது 12 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குகள் எதுவும் வாபஸ் பெறப்படவில்லை.
கேள்வி: 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் உங்களை மாற்றவேண்டும் என்று அ.தி.மு.க. புகார் அனுப்பியுள்ளதே?
பதில்: தேர்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். இவ்வாறு கந்தவேலு கூறினார்.
பேட்டியின்போது கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, தேர்தல் அதிகாரிகள் குமார், தில்லைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story