காவிரி ஆற்றில் கழிவுகளை கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம்


காவிரி ஆற்றில் கழிவுகளை கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:15 PM GMT (Updated: 1 Feb 2019 6:48 PM GMT)

காவிரி ஆற்றில் கழிவுகளை கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு,

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கொங்குநாடு இளைஞர்கள் பேரவை அமைப்பாளர் கோபால் ரமேஸ் தலைமை தாங்கினார். வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் கே.தேவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை நிறைவேற்ற திட்ட அலுவலகம் பெருந்துறை மற்றும் அவினாசியில் தொடங்கி நடைபெற்று வருவதற்கு தமிழக முதல் –அமைச்சருக்கு நன்றி.

* தமிழகத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து மற்ற மாநிலங்களைப்போல் சாலை ஓரமாக கேபிள் பதித்து கொண்டு செல்ல வேண்டும்.

* காவிரி ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்ணீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க உத்தரவிட வேண்டும். மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் அனைத்து மாணவ –மாணவிகளுக்கும் அரசு கல்லூரிகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் வெங்கடாசலம், கொங்கு முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தங்கவேல், தலைமை நிலைய செயாளர் பொன்முருகேஷ், வக்கீல் யுவராஜ்குமார், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் கார்வேந்தன் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story