தாலுகா அலுவலகங்களில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்; 7-ந்தேதி தொடங்குகிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு சுமார் ரூ.35 கோடி அளவில் கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் கடன் திட்டங்களின் கீழ் ரூ.34 கோடியே 65 லட்சம் அளவில் 6 ஆயிரத்து 847 சிறுபான்மையினருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் ரூ.100 கோடி அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு கடன் வழங்கப்பட உள்ளது.
அதன்படி தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. வருகிற 7-ந் தேதி கறம்பக்குடி தாலுகாவில் காலை 10 மணிக்கும், கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கும், 8-ந் தேதி இலுப்பூர் தாலுகாவில் காலை 10 மணிக்கும், விராலிமலை தாலுகாவில் பிற்பகல் 3 மணிக்கும், பொன்னமராவதி தாலுகாவில் 9-ந் தேதி காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளது.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையிலும், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரையிலும் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்து உள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகன கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story