மேச்சேரி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நெசவு தொழிலாளி கைது வீச்சரிவாள் பறிமுதல்


மேச்சேரி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நெசவு தொழிலாளி கைது வீச்சரிவாள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2019 3:45 AM IST (Updated: 2 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நெசவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேச்சேரி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எறகுண்டப்பட்டி சின்னேரிகாட்டைசோந்தவர் சின்னப்பொண்ணு. இவர் மாத சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் மேச்சேரி தர்மபுரி சாலையில் உள்ள சினிமா தியேட்டர் எதிரில் குடியிருந்து வரும் ரேவதி என்பவர் மாத சீட்டு போட்டு வந்துள்ளார். எறகுண்டப்பட்டி செட்டிக்காரிச்சியூர் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி மாதேஷ் (வயது 26) என்பவரை நேற்று முன்தினம் சீட்டு பணம் வாங்கி வருமாறு சின்னப்பொண்ணு கூறியுள்ளார்.

ரேவதியின் வீட்டுக்கு சென்று சீட்டு பணம் கொடுக்குமாறு மாதேஷ்் கேட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

அப்போது உனக்காக நான் காத்திருக்க வேண்டுமா? என கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். பின்னர் வீச்சரிவாளை எடுத்து வந்து காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ரேவதி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேச்சேரி போலீசார், விசாரணை நடத்தி பெண்ணை தாக்கி வீச்சரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மாதேஷ் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர். வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story