இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் செயல் நமச்சிவாயம் பேட்டி


இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் செயல் நமச்சிவாயம் பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2019 11:30 PM GMT (Updated: 2019-02-02T02:15:06+05:30)

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

புதுச்சேரி,

 புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் குழு உறுப்பினர் பிந்து கிருஷ்ணா கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் அனந்தராமன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், பெத்தபெருமாள், தேவதாஸ், பொதுச்செயலாளர் ஆறுமுகம், செயலாளர்கள் சாம்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

 புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு கவர்னர் மூலம் தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து போடப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். பா.ஜனதா முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story