ஓ.என்.ஜி.சி. பராமரிப்பு பணிக்கு எதிர்ப்பு, பேராசிரியர் ஜெயராமன் கைது


ஓ.என்.ஜி.சி. பராமரிப்பு பணிக்கு எதிர்ப்பு, பேராசிரியர் ஜெயராமன் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 4:30 AM IST (Updated: 2 Feb 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. பராமரிப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை, 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படு கிறது.

எனவே கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 20 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று போலீஸ் பாதுகாப்போடு கதிராமங்கலத்தில், பராமரிப்பு பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி போலீசார் குவிக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள், பராமரிப்பு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அப்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜூ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 More update

Next Story