போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொம்மனஹள்ளி-பேகூர் இடையே 80 அடி அகல ரோடு பெங்களூரு மாநகராட்சி முடிவு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொம்மனஹள்ளி-பேகூர் இடையே 80 அடி அகல ரோடு அமைக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி சிக்னலில் இருந்து பேகூர் கிராமம் வரை உள்ள சாலை மிக குறுகலாக உள்ளது.
இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த சாலையை அகலப்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
80 அடி அகல ரோடாக...
இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த ரோடு தற்போது 30 அடி அகல ரோடாக உள்ளது. சாலை விரிவாக்கம் மூலம் 80 அடி அகல ரோடாக மாற்றப்படுகிறது. 3.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதல்கட்ட திட்டத்திற்கு ரூ.46 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்கு 750 கட்டிடங்களை இடிக்க வேண்டும். முதல்கட்ட திட்டத்திற்கு 21 ஆயிரத்து 284 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலம் 257 உரிமையாளர்களுக்கு சேர்ந்தவை ஆகும்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.
நிலத்தை இழப்பவர்களில் பொம்மனஹள்ளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சதீஸ்ரெட்டியும் ஒருவர் ஆவார். அவருக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுரஅடி நிலத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி கடந்த 2017-ம் ஆண்டடே, நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும் நிலம் அதாவது கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால் அந்த பணி தொடங்கவில்லை.
பெங்களூரு மாநகராட்சி செயற்ெபாறியாளர்(சாலை கட்டமைப்பு) எம்.ஆர்.நந்தீஸ் கூறுகையில், “கர்நாடக டவுன் திட்டமிடல் சட்டத்தின்படி சாலை விரிவாக்க பணிகளுக்கு தேவைப்படும் கட்டிடங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தா சிலையில் இருந்து செயின்ட் பிரான்சிஸ் பள்ளி வரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு ேதவைப்படும் நிலம் குறித்த தகவல்களை சேரிக்க எங்களுக்கு 3 மாதங்கள் ஆனது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் நில ஆவணங்களுடன் 25 நாட்களுக்குள் ஆஜராகும்படி கூறி இருக்கிறோம்” என்றார்.
18 மாத காலக்கெடு
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இந்த திட்டத்திற்கான டெண்டர் விரைவில் விடப்படும். நிலம் கையகப்படுத்துதல் உள்பட இந்த திட்ட பணிகளை முடிக்க 18 மாத காலக்கெடு நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி நடைபெற்றால், வருகிற 2021-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும்” என்றனர்.
இந்த ரோடு, பன்னரகட்டா சாலையுடன் இணைகிறது. அந்த வழியாக எலெக்ட்ரானிக் சிட்டிக்கு செல்ல முடியும். ெபாம்மனஹள்ளி-பேகூர் சாலையை அகலப்படுத்த 6 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த திட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருப்பதால், பேகூர் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து சேவை தொடங்கினால், ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி முதல் எெலக்ட்ரானிக் சிட்டி வரையில் 20 சதவீத வாகன நெரிசல் குறையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story