திருமக்கோட்டை அருகே புயலில் இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
திருமக்கோட்டை அருகே புயலில் இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருமக்கோட்டை,
திருமக்கோட்டை அருகே பாலையக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் திருமக்கோட்டை பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதேபோல மரங்கள் சாய்ந்ததால் பாலையக்கோட்டை அரசு பள்ளியின் முன்பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
புயல் வீசி 2 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி வாளகத்திற்குள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிக்கின்றன.
மேலும் பள்ளி பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இடிந்து விழுந்த அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story