பாளையங்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடங்கியது


பாளையங்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 2 Feb 2019 4:15 AM IST (Updated: 2 Feb 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று தொடங்கியது.

நெல்லை,

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. டன்கீ ஈவன்ட்ஸ் தலைமை செயல் அலுவலர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் ‘ரிப்பன்‘ வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பொன்னையா நாடார் நிறுவனங்களின் மேலாளர் காளிதாஸ், அபி இம்போர்ட்டர் மேலாளர்கள் மணிகண்டன், அருள், ஸ்பேஷ்கிராப்ட் மேலாளர் பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில், மொத்தம் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன. மைசூர் மகாராஜா பாரம்பரிய வடிவிலான பர்மா தேக்கு கட்டில், ஊஞ்சல் செட், பீரோ, ஷோபாக்கள், ஏணியுடன் கூடிய டபுள்-சிங்கிள் பங்கர் கட்டில், சிங்கிள்-சிங்கிள் பங்கர் கட்டில், ஷோபாவுடன் கட்டில், மடக்கி வைத்துக் கொள்ளும் கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.9,499-க்கு ஒரு மரக்கட்டில், 1 மெத்தை, 2 தலையணைகள், 1 டிரஸ்சிங் மேஜை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘காம்போ ஆபராக’ விற்பனை செய்யப்படுகிறது. பிரிட்ஜ், சலவை எந்திரம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அமேசிங் புல்லட் மிக்சி, ஸ்னாக்ஸ் மேக்கர், மின்சார செலவை குறைக்கும் கருவி, நவீன மசாஜ் கருவிகள், பொம்மைகள், பெண்களுக்கான அலங்கார பொருட்கள், கைப்பைகள், ஹீரோ மோட்டார் சைக்கிள்கள், 100-க்கும் மேற்பட்ட இனிப்பு, கார வகைகள் உள்பட விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்கு ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தமும் கண்டறியப்படுகிறது. இதுதவிர குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடும் வகையில் 20 வகையான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. சிறிய வகை ரெயில், பலூன் வளாகம், காற்று பலூன் சறுக்கு உள்ளிட்டவற்றில் நேற்று குழந்தைகள் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். 

Next Story