மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Feb 2019 3:30 AM IST (Updated: 2 Feb 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது.

பேட்டை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது.

இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை தலைவர் பியூலா சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை சார்பாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்குகிறார். பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்று பேசுகிறார். ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ராமகிருஷ்ணன் தொடக்க உரையாற்றுகிறார்.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணா சிங், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் சாம் கார்கேவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த பயிற்சி வகுப்பில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story