பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது 19,650 மாணவ-மாணவிகள் பங்கேற்பு


பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது 19,650 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 3:45 AM IST (Updated: 2 Feb 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வில் 19,650 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

நெல்லை,

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் தேர்வு தொடங்குகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தால், செய்முறை தேர்வில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

ஏற்கனவே திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி, வள்ளியூர், சங்கரன்கோவில் என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என 345 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிக்கூடங்களில் செய்முறை தேர்வு நடந்தது. 19 ஆயிரத்து 650 மாணவ- மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். பாடவாரியாக செய்முறை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த தேர்வை கண்காணித்தனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர். 

Next Story