குமாரபுரம் அருகே வீடு புகுந்து பணம், ஏ.டி.எம். கார்டு திருட்டு; வாலிபர் கைது
குமாரபுரம் அருகே வீடு புகுந்து பணம், ஏ.டி.எம். கார்டை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபுரம்,
குமாரபுரம் அருகே கொற்றிக்கோடு, மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 63). இவரது மனைவி எபின்டெசி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை மின்சார பெட்டியின் அருகே வைத்து விட்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது, வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் நுழைய முயன்ற போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடினார்.
இதனால் பதற்றமடைந்த எபின்டெசி திருடன், திருடன் என கத்தினார். தொடர்ந்து எபின் டெசி பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை காணவில்லை. அவற்றை அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து எபின் டெசி கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் விஜிஸ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுத்ததாக எபின்டெசி செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இந்த தகவலை உடனே அவர் போலீசாருக்கு தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் புகுந்து பணம், ஏ.டி.எம். கார்டை திருடியது முண்டவிளையை சேர்ந்த அபினேஷ் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் திருடி சென்ற ரூ.5 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு மூலமாக எடுத்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story