செங்கத்தில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை
செங்கத்தில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்,
செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மாணவிகள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அதைத்தொடர்ந்து செய்முறை தேர்வு நடக்க விருந்த நிலையில் மாணவிகள் 100-க்கு மேற் பட்டோர் திடீ ரென பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து செங்கம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீ சார் மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப் பினும் மாணவிகள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
அப்போது மாணவிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வந்தால் தான் கலைந்து செல்வோம் என கூறி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி கந்தசாமி, பெற்றோர் கள், ஆசிரியர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமுதா, ராஜசேகர் மற்றும் போலீசார், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளிக்கு வந்து மாணவிகளை பள்ளியின் உள்ளே அழைத்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள், செய்முறை தேர்வில் முதலில் அரசு பள்ளி மாணவிகளை தவிர்த்து தனியார் பள்ளி மாணவர்களை அனுமதித் ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். மேலும் தங் களுக்கு புரியும்படி பாடம் நடத்திய ஆசிரியர்கள் பணி யிட மாற்றம் செய்யப் பட் டுள்ளதையும், அவர்களை தங்கள் பள்ளிக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து மாணவிகள் தங்கள் வகுப்ப றைக்கு சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.
Related Tags :
Next Story