நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பணகுடி,
பணகுடி ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள், நம்பி சிங்கபெருமாள் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
மூலைக்கரைப்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. தொடர்ந்து காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சப்பர பவனி நடந்தது. சிவகிரி சொக்கநாதன்புத்தூரியில் உள்ள தவநந்தி கண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணியம் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தாருகாபுரம் மத்தீஸ்தநாதர் கோவில், ராமநாதபுரம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அம்பை காசிநாத சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் அம்மையப்பர் கோவில், மயிலானந்த சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேரன்மாதேவி அம்மைநாதர், ஆவுடையம்மாள் கோவிலில் நடந்த விழாவில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story