கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் திடீர் ஆய்வு


கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:10 PM GMT)

ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில், மருத்துவக்குழுவினர் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தனர். இதில் மருத்துவர் பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story