சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 16-வது ஆண்டு விழா மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது


சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 16-வது ஆண்டு விழா மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது
x
தினத்தந்தி 3 Feb 2019 5:00 AM IST (Updated: 3 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 16-வது ஆண்டு விழா நேற்று நடந்தது.

சென்னை, 

சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 16-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கான விழா பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தந்தி டி.வி. இயக்குனர் பி.ஆதவன் ஆதித்தன் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பெற்றோருக்கு விருதுகளும் வழங்கினார். காமராஜர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவரும், சென்னை வாழ் நாடார் சங்க தலைவருமான பி.சின்னமணி நாடார் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நாராயணன், சென்னை வாழ் நாடார் சங்க பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், பள்ளியின் நிர்வாக அதிகாரி எஸ்.கோவிந்தசாமி, முதல்வர் எல்.ஷீலா, சென்னை வாழ் நாடார் சங்க துணை தலைவர் எம்.ஏ.திரவியம், செயலாளர்கள் எஸ்.செல்லத்துரை, கே.எம்.செல்லத்துரை, எல்.சி.மனோகரன், எம்.மாணிக்கம் மற்றும் ஆர்.முத்து உள்பட கல்விக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாணவ-மாணவிகளின் கண்கவர் கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் காமராஜர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளரும், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளருமான டி.தங்கமுத்து வாழ்த்துரை வழங்கினார்.

Next Story