திட்டச்சேரி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திட்டச்சேரி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. உடைந்த குழாயை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திட்டச்சேரி,
திட்டச்சேரி அருகே குத்தாலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், மண்டகமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குத்தாலம் கிராமம் தோப்பு தெருவில் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குடிநீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலில் கலக்கிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
குத்தாலம் கிராமம் தோப்பு தெருவில் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாக வாய்க்கால் மற்றும் சாலையில் செல்கிறது. இதனால் சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட குழாய் உடைப்பை பார்வையிட்டு, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story