பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் கோரிக்கை

பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவெண்காடு,
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் ஊராட்சியில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பன்னீர்செல்வம், ராம.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முத்தமிழ் வரவேற்றார். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் துரை கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
பெருந்தோட்டம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள மயானத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். பெருந்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துகுப்பம், நாயக்கர்குப்பம், சாவடிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தெரு மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பூம்புகார் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
இதேபோல் திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஊராட்சி செயலாளர் துரைராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவபிரகாசம், பஞ்சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story