நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மலைக்கோட்டை,
அண்ணா நினைவு நாளையொட்டி, திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொருளாளர் அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார் உள்பட பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அ.ம.மு.க. சார்பில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாநில அமைப்பு செயலாளர்கள் மனோகரன், சாருபாலா தொண்டைமான் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட பொருளாளர் புலவர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி நாடார் பேரவை சார்பில் தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல தி.க., திவாகரன் கட்சி, எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
லால்குடியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு லால்குடி ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகரன், பூவாளூர் ஜெயசீலன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர்கள் நன்னிமங்கலம் ஆறுமுகம், ஆங்கரை குணசேகரன், கூகூர் செல்வழகன், பெருவை கேசவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரீனாசெந்தில் மற்றும் கட்சியின் நகர, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தா.பேட்டை கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயம் தலைமை தாங்கி அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அ.செங்கமலை, கூட்டுறவு சங்க தலைவர்கள் அப்பாவு, ராஜகோபால், ராமஜெயம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமை தாங்கி அண்ணா படத்திற்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
துறையூரில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சேனை செல்வம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் செக்கர் ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நகர செயலாளர் பீரங்கி சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட துணை அமைப்பாளர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பாக ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story