தக்கலை அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


தக்கலை அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 3:45 AM IST (Updated: 4 Feb 2019 8:34 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குளச்சல்,

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 24). இவருக்கும், தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இளம்பெண்ணுக்கு 17 வயதே ஆனதால், திருமண வயதை அடைந்ததும் இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று உறவினர்கள் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இளம் பெண்ணின் தாயார் வெளியூருக்கு சென்றார். இதனால் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த ஷாஜி அந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனியாக இருந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது தாயார், இளம்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பத்துடன் உள்ளதாக தெரிவித்தனர்.

இதனை கேட்ட இளம்பெண்ணும், தாயாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனது மகளிடம் விசாரித்த போது, ஷாஜி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அழுது கொண்டே கூறினார். இதைத்தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஷாஜியை கைது செய்தார்.

Next Story