சிட்லிங் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்: அரூரில் அரசு டாக்டரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை


சிட்லிங் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்: அரூரில் அரசு டாக்டரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2019 4:00 AM IST (Updated: 4 Feb 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

சிட்லிங் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரூரில் அரசு டாக்டரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், சிட்லிங் பகுதியை சேர்ந்த பிளஸ்–2 மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 10.11.2018 அன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (22), சதீஷ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த மாணவியின் பெற்றோர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது, போலீசார் புகார் மனுவை பெறாமல் அலைகழித்ததாகவும், அரூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மாணவிக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் டாக்டரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

அதன்பேரில் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணா தலைமையிலான மருத்துவ குழுவினர், அரூர் அரசு ஆஸ்பத்திரியில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிக்கு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளின் விவரம், உயர் மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரைகள் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை மேற்கொண்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விசாரணையின் போது அரூர் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story