ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச இந்து மகாசபையினரை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு இழிவுபடுத்தி அதனை வலைதளங்களில் வெளியிட்ட உத்தரபிரதேச இந்து மகாசபையினரை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் ஆலோசனைப்படி ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து மகாசபையினர் உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கவுசி மகாலிங்கம், அழகு, வட்டார தலைவர் கோபால், நகர் தலைவர் கோபி, மற்றும் ரவி, சுல்தான் மைதீன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story