பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்


பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:45 AM IST (Updated: 5 Feb 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியின் இறைவணக்க சமயத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வலியுறுத்தினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வீரவல்லவன், போக்குவரத்துத் துறை அதிகாரி பழனிசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து அரசுத்துறைகளும் மேற்கொள்ளவேண்டும். முக்கியமாக, அதிவேகமாக வாகனங்களை இயக்குவோர் கண்காணிக்கப்பட்டு அரசு விதிகள்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேன்டும். அதேபோல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரையும், உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோரையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் சாலைகளில் விபத்துக்கு காரணமாக உள்ள பள்ளங்களை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் உடனே சரிசெய்யவேண்டும். வேகத்தடைகளில் கருப்பு, வெள்ளை வண்ணம் பூசப்படவேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவேன்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் புரிந்துகொள்ளும்வகையில், சாலைவிதிகள், விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். முக்கியமாக பள்ளியில் இறைவணக்க சமயத்தில், 10 நிமிடம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்தாற்போல் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசினார்.

Next Story