பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Feb 2019 10:00 PM GMT (Updated: 5 Feb 2019 3:12 PM GMT)

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி,

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் கதிர்வீச்சுத்துறை டாக்டர் லலிதா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாக்டர் ஷாலினி வரவேற்றார். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், புற்றுநோயை சரியான மருத்துவ சிகிச்சை மூலம் ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய முடியும். புற்றுநோயை பற்றி மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மேலும் புற்றுநோயை தடுக்கும் உணவு முறைகள் குறித்து கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அதையும் அவர் பார்வையிட்டார்.

விளக்கம்

கல்லூரியின் 3–ம் ஆண்டு மாணவிகள் நந்தினி, திவ்யா, முருகலட்சுமி ஆகியோர் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து வீடியோ படக்காட்சி மூலம் விளக்கி கூறினர்.

இந்த நிகழ்ச்சியில், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ், டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேழ்வரகு கஞ்சி வழங்கப்பட்டது. கல்லூரி களப்பயிற்சியாளர் கிறிஸ்டி ஆர்.டாபினி நன்றி கூறினார். நிகழ்ச்சியை கல்லூரியின் இணை பேராசிரியர்கள் பென்னரசி, லெஸ்லி ஜெயரூபி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


Next Story