காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கல் குடோன்களில் தரக்கட்டுப்பாடு இணை இயக்குனர் ஆய்வு


காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கல் குடோன்களில் தரக்கட்டுப்பாடு இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 5 Feb 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கி வைத்திருந்த குடோன்களில் தரக்கட்டுப்பாடு இணை இயக்குனர் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஏரிக்கரை அருகில் இந்துஜா நகர் உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 குடோன்கள் இருந்து வந்தது. இதில் கடந்த சில மாதங்களாக காலவதியான பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி உள்பட விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு விவசாய இடுபொருட்கள் உரிமம் இன்றியும், குடோன்களில் மின்சார இணைப்பு எதுவும் இல்லாமலும் பதுக்கி வைக்கப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனை செய்யப்பட்ட போது 50 டன் எடை கொண்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 40 வகையான காலாவதியான பூச்சிகொல்லி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடோன்களுக்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை வேளாண்மை துறை திருவள்ளூர் மாவட்ட தரக்கட்டுப்பாடு அலுவலர் ரேவதி, மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி, மீஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், துணைதாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன், வேளாண்மை அலுவலர்கள் டில்லிகுமார், இளங்கோ, கணேஷ் ஆகியோர் காலாவதியான பூச்சிகொல்லி மருத்துகள் இருந்த குடோன் களை திறந்தனர்.

அப்போது 40 வகையான பூச்சிகொல்லி மருந்துகள் களைக்கொல்லி மருந்துகளின் தரம் அளவீடுகள் மதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story