திருச்சி பெண் சிறை வார்டரை தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது வேறொரு பெண்ணுடன் இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தம்
திருச்சி பெண்கள் சிறை வார்டரை தற்கொலை தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். சுவாமிமலையில் வேறொரு பெண்ணுடன் இன்று(புதன்கிழமை) நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
திருச்சி,
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்த அவர் கடந்த 3-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவரும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வரும் வெற்றிவேலும் (24) காதலித்து வந்ததும், வெற்றிவேலுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால், காதல் தோல்வியின் காரணமாக செந்தமிழ்செல்வி தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமான வெற்றிவேல் மீதும், சாதியின் பெயரை சொல்லி திட்டிய அவரது அண்ணன் கைலாசம், அவரது அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தெரிவித்திருந்தார். அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வெற்றிவேலும், அவரது அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகின்றனர். ராஜசுந்தரி திருச்சி மகளிர் சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தததால் 3 பேரும் தலைமறைவாகினர். வெற்றிவேலின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஆகும். 3 பேரையும் பிடிக்க கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெற்றிவேல் திருமானூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். மேலும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைதான வெற்றிவேல் அளித்த வாக்குமூலத்தில், தான் செந்தமிழ்செல்வியை காதலிக்கவில்லை எனவும், அவர் வேறு ஒருவரை காதலித்ததாகவும், தனக்கு அவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் தான் பழக்கம் என்றும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதனை நாங்கள் ஏற்கவில்லை என போலீசார் கூறினர். கைதான வெற்றிவேல் பொய் கூறலாம் என்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
வெற்றிவேலுக்கு இன்று(புதன்கிழமை) சுவாமிமலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த விவகாரம் தெரிந்ததும் அந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில் செந்தமிழ்செல்வி அறையில் இருந்து ஒரு டைரி, அவரது செல்போனை கைப்பற்றியிருந்தனர். அந்த டைரியின் ஒரு பக்கத்தில், ‘எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’, அதனால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அந்த டைரியில் மேலும் செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் காதலித்து வந்தது பற்றி பல உருக்கமான தகவல்களை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். டைரியில் வேறு ஒன்றும் எழுதவில்லை என்றதை மட்டுமே பதிலாக கூறினர். ஆனால் அந்த டைரியில் செந்தமிழ்செல்வி தனது காதலன் பற்றி முழுவிவரத்தையும் குறிப்பிட்டிருக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில் செந்தமிழ்செல்வியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பல புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாலை 4.30 மணி வரை செல்போன் உபயோகத்தில் இருந்துள்ளது. அதன்பின் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. செந்தமிழ்செல்வி செல்போனில் டிஸ்பிளே பிக்சரில் ‘லாஸ்ட் டே’ என ஆங்கிலத்திலும், ஸ்டேட்டசில் ‘குட் பை டூ ஆல்’ எனவும் வைத்திருந்துள்ளார். அதே நேரத்தில் வெற்றிவேல் தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ‘லூசு பேபி’ எனவும் வைத்திருக்கிறார். செந்தமிழ்செல்வியின் செல்போனில் இருவரும் ஒன்றாக சேர்த்திருந்தது போல பல புகைப்படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. செந்தமிழ்செல்வியின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story