ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் - தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் - தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 5 Feb 2019 10:07 PM GMT (Updated: 5 Feb 2019 10:07 PM GMT)

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் கோவையில் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி முகாம் தொடங்கியது.

கோவை, 

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி முகாம் ராஜவீதி துணி வணிகர் சங்க பள்ளியில் தொடங்கியது. முகாமை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

கோவை நகர கல்வி மாவட்ட அலுவலர் என்.கீதா, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 40 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மாநில அளவில் பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதில் பள்ளியின் வளர்ச்சி குறித்து திட்டமிடல், பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது, அதை அணுகும் முறை, தீர்வு, ஆசிரியர்- மாணவர்கள் ஒற்றுமையை மேம்படுத்துதல், சிறந்த மாணவர் களை உருவாக்குதல், பள்ளி நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்துவது உள்ளிட்ட பள்ளியின் வளர்ச் சிக்கான நடைமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, குணேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story