நடப்பாண்டில் 3,500 டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய இலக்கு - கலெக்டர் ராமன் தகவல்
வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரத்து 500 டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
வேலூர் அண்ணா சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு துவரம்பருப்பு கொள்முதல் மைய தொடக்க விழா நேற்று நடந்தது. வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் நரசிம்மரெட்டி வரவேற்றார்.
துவரம்பருப்பு கொள்முதல் மற்றும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி விளக்கி பேசினார். விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தில் துவரம்பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. 2019-20-ம் ஆண்டில் ரபிப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கொள்முதல் மையத்தில் வாங்கப்படும் துவரம்பருப்பு குறைந்தபட்ச ஆதாரவிலை 56.75 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உள்ளூரில் விற்பனை செய்யும் விலையைவிட அதிகமானதாகும். தற்போது ரபிப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரம்பருப்பு வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டுள்ள துவரம்பருப்பை அறுவடை செய்து கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம். கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு போன்றவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொடுக்க வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யவே அடங்கல், சிட்டா உள்ளிட்டவை கேட்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப பயிர்களை பயிரிட வேண்டும். விவசாயத்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்று நினைக்காமல், விவசாயத்தை லாபகரமாக எப்படி செயல்படுத்தலாம் என்று யோசித்து சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் விற்பனைக்குழு செயலாளர் தயாசங்கர்லால் ஸ்ரீவஸ்தவா நன்றி கூறினார்.
விற்பனை செய்யும் நாளிலேயே பணப்பட்டுவாடா
விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை வியாபாரிகள் அன்றைய தினமே தருவதில்லை. அடுத்த நாள் வந்து பெற்று செல்லும்படி கூறி அலைக்கழிக்கிறார்கள். அதனால் பணத்தை வாங்கி செல்வதற்காக மறுநாள் வந்து, காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படும் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்டறிந்த கலெக்டர் ராமன், அருகே நின்று கொண்டிருந்த வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் இனிமேல் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story