சேத்தியாத்தோப்பு அருகே ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு - போலீசார் விசாரணை


சேத்தியாத்தோப்பு அருகே ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Feb 2019 4:00 AM IST (Updated: 6 Feb 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உளள பின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 47). இவர் தலைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் மறுநாள் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜாராமன், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story