எடியூரப்பாவின் முதல்-மந்திரி கனவு நிறைவேறாது : மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி
பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
முதல்-மந்திரி பதவியில் அமர எடியூரப்பா கருடாசயன யாகம் நடத்துகிறார். இந்த யாகம் 8 நாட்கள் நடக்கிறது. இந்த யாகத்தால் கனவு நனவாகும் என்று எடியூரப்பா நம்புகிறார். ஆனால் அவரது முதல்-மந்திரி கனவு நிறைவேறாது. கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்.
எடியூரப்பா தான் முதல்-மந்திரியாகிவிட வேண்டி கடவுளிடம் செல்கிறார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்காது. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தான் உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எக்காரணம் கொண்டும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.
முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி நீடிப்பார். எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. கூறுகிறார். அது தவறு. குமாரசாமி, மக்களின் நலன் சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.
Related Tags :
Next Story