மதுரை அருகே கண்ணை தோண்டி பெண் கொடூர கொலை


மதுரை அருகே கண்ணை தோண்டி பெண் கொடூர கொலை
x
தினத்தந்தி 6 Feb 2019 5:30 AM IST (Updated: 6 Feb 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கண்ணை தோண்டி பெண் கொலை செய்யப்பட்டார்.

பேரையூர்,

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கே.சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது 51). இவரது மனைவி மாரியம்மாள்(48). இவர்களுக்கு ராமராஜ்(24) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் வழக்கம்போல் மாரியம்மாள் நேற்று காலையில் வயலுக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதைதொடர்ந்து அவரை தேடி பரமேஸ்வரன் மற்றும் உறவினர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மாரியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு மாரியம்மாள் இடது கண் தோண்டப்பட்டு முகத்தில் ரத்தம் உறைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைதொடர்ந்து மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் மாரியம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார், குடும்பத்தில் ஏதும் பிரச்சினை உள்ளதா, யாரிடமும் முன்விரோதம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story