மராட்டிய பட்ஜெட் 27-ந் தேதி தாக்கல்


மராட்டிய பட்ஜெட் 27-ந் தேதி தாக்கல்
x
தினத்தந்தி 6 Feb 2019 6:00 AM IST (Updated: 6 Feb 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் 25-ந்தேதி தொடங்குகிறது. 27-ந்தேதி பட்ஜெட்தாக்கல் செய்யப்படுகிறது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 25-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் தொடங்குகிறது.

27-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள்(28-ந் தேதி) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. பின்னர் பட்ஜெட் நிறைவேற்றப்படுகிறது.

துணை மானிய கோரிக்கைகளை தவிர்த்து, மாநிலத்தில் இரு அவைகளிலும் வறட்சி குறித்த விவாதம் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. 2-ந்தேதி அரசின் பதிலுடன் கூட்டத்தொடர் முடிவடையும்.

6 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே மந்திரி சபை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை 25-ந் தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்தநிலையில் மேலும் ஒருநாள் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story