பாராமதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி படுகாயம்


பாராமதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி படுகாயம்
x
தினத்தந்தி 6 Feb 2019 5:46 AM IST (Updated: 6 Feb 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை சேர்ந்த கார்வர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான செஸ்னா 172 என்ற பயிற்சி விமானம் நேற்று மதியம் பாராமதி பகுதியில் பறந்து கொண்டு இருந்தது.

மும்பை, 

பயிற்சி விமானத்தை சித்தார்த் டைடஸ் என்பவர் ஓட்டினார். தரையில் இருந்து அந்த விமானம் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது மதியம் 12 மணியளவில் என்ஜினில் கோளாறு காரணமாக திடீரென அந்த விமானம் அங்குள்ள வயலில் செங்குத் தாகவிழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானி படுகாயமடைந்தார். அவருக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய விமானம் ஒரு என்ஜின் மட்டும் கொண்டதாகும். இதில் 4 பேர் உட்கார முடியும்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பாராமதி செல்ல உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறினார்.

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தால் பாராமதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story