சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் பராமரிப்பு பணி : 230 விமான சேவைகள் ரத்து
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நாளை தொடங்கி மார்ச் மாதம் 21-ந்தேதி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் 230 விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
மும்பை,
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பணி நாளை(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி வரை நடக்கிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மணி நேரம் நடைபெறுகிறது.
பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் விமான போக்குவரத்து எதுவும் நடக்காது.
இது குறித்து விமான நிலைய சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதே போன்ற பராமரிப்பு பணி கடந்த 2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளது.
இந்த பணிகள் காரணமாக மொத்தம் 230 விமான சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது, என தெரிவித்தார்.
Related Tags :
Next Story