பயணத்தை எளிதாக்கும் ‘பாஸ்போர்ட் அடாப்டர்’


பயணத்தை எளிதாக்கும் ‘பாஸ்போர்ட் அடாப்டர்’
x
தினத்தந்தி 6 Feb 2019 2:59 PM IST (Updated: 6 Feb 2019 2:59 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலிருந்து வேலை, தொழில் சார்ந்து மட்டுமின்றி சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு செல்வது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வெளிநாடுகளுக்கு செல்லும்போது அத்தியாவசியமான பொருட்கள் இல்லையென்றால் அவற்றுக்காக நீங்கள் பெரிதும் அலைய வேண்டியிருக்கும் அல்லது மிகப் பெரும் தொகையை நீங்கள் செலவிட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வோருக்கு மிகவும் அவசியமானது அடாப்டர். ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், கேமரா இவற்றை சார்ஜ் செய்ய அடாப்டர் அவசியம்.

இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான சாக்கெட்டுகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான நாடுகளில் உள்ள மின் இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில் சாக்கெட்டுகளை வடிவமைத்துள்ளது ஜென்டியூர் நிறுவனம். இதற்கு ஜென்டியூர் பாஸ்போர்ட் டிராவல் அடாப்டர் என பெயர் சூட்டியுள்ளனர். இரண்டே கால் அங்குல உயரம், 2.8 அங்குல அகலம், 2.5 அங்குல நீளம் கொண்டது. இதன் எடை 159 கிராம்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள மின் இணைப்பிற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு யு.எஸ்.பி. போர்ட்களை இணைக்க முடியும். இதில் 600 வாட்ஸ், 100 வோல்ட் ஏ.சி., 1500 வாட்ஸ், 250 வோல்ட் ஏ.சி. என அந்தந்த நாடுகளின் மின் சப்ளைக்கேற்ப வடிவமைக்கப்பட்டது. இதில் ஆட்டோ ரீ செட்டிங் பியூஸ் இருப்பதால் அனைத்து கேட்ஜெட்களும் சார்ஜ் ஆனதும் மின் இணைப்பை தானாகவே துண்டித்துவிடும். 150 நாடுகளில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அடாப்டரின் விலை 49.95 டாலர் ஆகும்.


Next Story