ஸ்மார்ட் சூட்கேஸ்
அலுமினியத்தால் ஆன முதலாவது ஸ்மார்ட் சூட்கேஸை சம்சாரா நிறுவனம் உருவாக்கியுள்ளது. சர்வதேச பயணங்களுக்கேற்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் உறுதியான, எடை குறைந்த அலுமினியம் அலாயால் ஆனது.
இதன் கீழ் பகுதியில் உள்ள சக்கரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. கீழ்ப்பகுதியில் நான்கும், பக்கவாட்டில் இரண்டும் உள்ளதால் இழுத்துச் செல்லும்போதும் எளிதாக இருக்கும்.
இதை உங்கள் மொபைல் போனுடன் இணைத்துவிட்டால் (இதற்கென பிரத்யேக செயலி உள்ளது) சூட்கேஸ் உங்கள் கண்காணிப்பை விட்டு விலகினாலே எச்சரிக்கை வரும். இதன் மேல் பகுதி லேப்டாப் வைத்து வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதில் பவர் பேங்க் உள்ளதால் உங்கள் மொபைல் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். விமான பயணத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இதன் விலை 690 டாலர்.
Related Tags :
Next Story