மோதிர வாட்ச்


மோதிர வாட்ச்
x
தினத்தந்தி 6 Feb 2019 3:24 PM IST (Updated: 6 Feb 2019 3:24 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக வெளியில் சென்றிருக்கும் போது மணி பார்ப்பதற்கு கையில் இருக்கும் கடிகாரத்தையோ அல்லது கைப்பேசியையோ பார்ப்போம். ஆனால் மோதிரத்தை பார்த்து மணியை தெரிந்து கொள்ள முடியுமா? முடியும் என்கிறது இந்த ரிங் வாட்ச். இது வாட்ச் மற்றும் மோதிரம் ஆகிய இரண்டின் கலவையாக செயல்படுகிறது.

இந்த மோதிரத்தை அணிந்து கொண்டு லேசாக சுற்றினால் நீல நிற எல்.இ. டி. விளக்குகள் சரியான நேரத்தை டிஜிட்டலாக காண்பிக்கின்றன. சர்ஜிக்கல் ஸ்டீல் எனப்படும் உயர்ரக உலோகத்தால் செய்யப்படுவதால் இந்த மோதிர கடிகாரம் மிகவும் உறுதியாக இருக்கிறது. சுற்றிய பின்பு பதினைந்து நொடிகள் நேரம் காண்பித்து விட்டு மீண்டும் சாதாரண மோதிரம் போல மாறிவிடுகிறது. மற்ற கைக்கடிகாரங்களை போல அடிக்கடி பேட்டரி மாற்றும் பிரச்சினை இதில் இல்லை. ரீ சார்ஜ் செய்யக்கூடிய இதன் லித்தியம் பேட்டரி மூன்று வருடங்களுக்கு நீடித்து உழைக்கும்.

வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ளலாம். பதினெட்டு அளவுகளில் இம்மோதிரம் கிடைக்கிறது. இதன் விலை 250 அமெரிக்க டாலர் ஆகும்.

Next Story