தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா


தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 7 Feb 2019 3:30 AM IST (Updated: 6 Feb 2019 5:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா

தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் பட்டுக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.

யார்–யார்?

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயமுருகன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில உதவி செயலாளர் முனியராஜ், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு மாநில சங்க நிர்வாகி சந்தானசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஒப்பந்த ஊழியர் சங்க கிளை செயலாளர் ரம்யா நன்றி கூறினார்.


Next Story