இ–சேவை மையத்தை திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு
களியக்காவிளை அருகே இ–சேவை மையத்தை திறக்கக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள சாரப்பழஞ்சி அதங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசு இ–சேவை மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சேவை மையம் திறக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த இ–சேவை மையத்தை திறக்கக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் கூட்டுறவு சங்கம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் முன்சிறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோன்மணி, மெதுகும்மல் பஞ்சாயத்து தி.மு.க. செயலாளர் ஜெயராஜ், பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ், தே.மு.தி.க. பஞ்சாயத்து செயலாளர் ஜெயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்சிறை வட்டார செயலாளர் சிதம்பரகிருஷ்ணன், வட்டார குழு உறுப்பினர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சப்–இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், கூட்டுறவு சங்க செயலாளர் லைலா, கூட்டுறவுத்துறை களப்பணியாளர் விஜயராணி ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இன்று (வியாழக்கிழமை) முதல் இ–சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story