நாடாளுமன்ற தேர்தலையொட்டி 14 தாசில்தார்கள் இடமாற்றம்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி 14 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 7 Feb 2019 3:15 AM IST (Updated: 7 Feb 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 14 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளது. இதையொட்டி ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணிபுரியும் தாசில்தார்கள் 14 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், நாமக்கல் ஆதிதிராவிடர் நல தனிதாசில்தாராகவும், பரமத்திவேலூர் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் தங்கம், குமாரபாளையம் தாசில்தாராகவும், திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியம், நாமக்கல் தாசில்தாராகவும், மோகனூர் தாசில்தார் கதிர்வேல், திருச்செங்கோடு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் ஆதிதிராவிடர் நல தாசில்தாராக பணியாற்றி வந்த கந்தசாமி, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட வழிச்சாலை நிலஎடுப்பு தாசில்தாராகவும், ராசிபுரம் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பாஸ்கரன், சேந்தமங்கலம் சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், மோகனூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பாஸ்கர், ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், சேந்தமங்கலம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கொல்லிமலை தாசில்தார் செல்வராஜ், மோகனூர் தாசில்தாராகவும், சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ராஜேஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், ராசிபுரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு தாசில்தார் ராஜ்குமார், கொல்லிமலை தாசில்தாராகவும், நாமக்கல் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருமுருகன், நாமக்கல் புறவழிச்சாலை நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜகோபால் நாமக்கல் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story